ஹிப்ஹாப் ஆதியின் 'பி.டி.சார்' டிரைய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் திரைப்படத்தின் டிரைய்லர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.;

Update:2024-05-14 18:03 IST

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து, சினிமாவுக்கு வந்த ஹிப்ஹாப் ஆதி பல படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சுந்தர் சி இயக்கிய அரண்மனை உள்பட பெரும்பாலான படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து இறுதியாக அவரது நடிப்பில் வீரன் திரைப்படம் வெளியானது. தற்போது ஆதி நடித்துள்ள திரைப்படம் பி.டி சார். கார்த்திக் வேனுகோபாலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரைய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை மறுநாள் மே 16-ம் தேதி படத்தின் டிரைய்லர் வெளியாகிறது. மேலும், மே 23-ம் தேதி பி.டி சார் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

விளையாட்டுத் துறை ஆசிரியரின் வாழ்வியலைப் பேசுகிறதாம் இந்தப் படம்.

Tags:    

மேலும் செய்திகள்