கனடாவில் ஸ்கை டைவிங் மூலம் 'தி கோட்' பட புரோமோசன்

'தி கோட்' திரைப்படம் வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-09-02 07:06 GMT

கனடா,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரைலர் மற்றும் 4 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனத்தை ஈர்த்தன. இப்படம் வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கி இருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். மேலும் இப்படம் ஒரு சில தினங்களில் வெளியாக உள்ளநிலையில், படக்குழுவினர் படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் கனடாவில் ஸ்கை டைவிங் மூலம் இந்த படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்