'கோமாளி' இயக்குனர் இயக்கி நடிக்கும் படத்திற்கு விஜய் படத்தின் டைட்டில்..!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் டுடே' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-04 22:35 GMT

சென்னை,

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் 'கோமாளி' திரைப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' என்ற டைட்டிலை வைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்