நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பிரபல நடிகருடன் காதல்...!
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.;
திருவனந்தபுரம்
கட்டா குஸ்தி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவர் நடிப்பில் வெளியான 'மாயநதி', 'வரதன்', 'காணக்காணே' உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழில் 'ஆக்ஷன்' 'ஜகமே தந்திரம்' 'கார்கி' படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, பொன்னியின் செல்வனில் 'பூங்குழலி' கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்தது. சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் ஆகஷன் காட்சிகளில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை 'இதய' குறியீடுடன் பகிர்ந்துள்ளார். இதனால் , இருவரின் ரசிகர்களும் 'காதலுக்கு வாழ்த்துக்கள்' என கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.ஐஸ்வர்யா லட்சுமி தனது அறிவிப்பால் பல ரசிகர்களின் இதயங்களை உடைத்து உள்ளார்.
சில ரசிகர்கள், இது ஏதாவது படத்திற்கான விளம்பரமா என்று ஆர்வமாக கேட்டனர். "இது வெறும் திரைப்பட அறிவிப்பு என்று கூறுங்கள்! என ஒரு ரசிகர் கேட்டு உள்ளார்.
ஆனால், இது வெறும் நட்பா இல்லை காதலா என ஐஸ்வர்யா லக்ஷ்மி எதுவும் சொல்லவில்லை!
ஐஸ்வர்யா லட்சுமி ஒரு மாடலாக இருந்தார் மற்றும் 2017 இல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பொன்னியின் செல்வன் 1, கட்டா குஸ்தி, அம்மு, கார்கி மற்றும் அர்ச்சனா 31 நாட் அவுட் உட்பட, 9 படங்களுடன் 2022 ஆம் ஆண்டில் ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் ஒரு திறமையான நடிகை, அவர் சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். உண்மையில், அவர் கார்கியின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.
இருவருக்கும் 2023 இல் படங்கள் உள்ளன. மலையாளத்தில் வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக் மூலம் அர்ஜுன் தாஸ் இந்தியில் அறிமுகமாகிறார். அன்வர் ரஷீத்தின் ஒரு மலையாளப் படத்திலும் வேலை செய்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு துல்கர் சல்மானுடன் கிங் ஆப் கோதா மற்றும் பொன்னியின் செல்வன் 2 உள்ளது.