உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்"

Update: 2022-10-12 11:09 GMT

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. திரைப்படம் வெற்றி கரமமாக ஓடி கொண்டிருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

முந்தைய தமிழ் படங்களின் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. உலக அளவில் அதிக வசூல் குவித்த பெரிய வெற்றி படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்