கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியிடுவதை தடைவிதிக்கக்கோரி மனு - தள்ளுபடி செய்த கோர்ட்டு

கேஜிஎஃப்-2 திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான நிலையில் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2022-05-24 15:58 GMT

பெங்களூரு,

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கேஜிஎஃப்-2 திரைப்படம் 1,500 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், படத்தில் டிரைலரில் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், புகைப்பிடித்தலை ஊக்குவிப்பது போலவும் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கேஜிஎஃப் 2 திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கர்நாடக மாநில ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, கேஜிஎஃப்-2 திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டதால் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்