ஹாரர் திரில்லர் 'பேச்சி' படத்தின் டிரெய்லர் வைரல்

நடிகை காயத்ரி சங்கர் நடிக்கும் 'பேச்சி' படத்தின் டிரெய்லர் வெளியானது.;

Update: 2024-07-13 07:42 GMT

சென்னை,

தமிழில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் காயத்ரி சங்கர். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் 'ரம்மி', 'புரியாத புதிர்', 'சூப்பர் டீலக்ஸ்', 'துக்ளக் தர்பார்', 'மாமனிதன்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார்.

தற்போது, காயத்ரி சங்கர் பேச்சி என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, இந்த படத்தின் டிரெய்லரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

அதில் நண்பர்கள் காட்டுக்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்ற வகையில் அமைந்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்