சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம்...!
சிறந்த ஒளிப்பதிவுக்கான (Best Cinematography) ஆஸ்கர் விருதை ‘ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்ட்டர்ன் பாண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் பிரண்ட் வென்றார்.
* சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை குஹ்லிர்மொ டில் டோரோஸ் பினோஷியோ ( Guillermo del Toro's Pinocchio) வென்றது.
* சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' ( everything everywhere all at once) படத்திற்காக நடிகர் கி ஹுங் குயின் வென்றார்.
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘அன் ஐரிஷ் குட்பாய்’ (An Irish Goodbye) குறும்படம் வென்றது
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருந்தை ‘நவல்னி’ (Navalny) வென்றது
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்திற்காக ஜேமி லீ குருஷ்டீஸ் வென்றார்
சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு, 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில், திரைத்துறையில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டது.