ராயன் படத்தின் 'ஓ ராயா' வீடியோ பாடல் வெளியானது
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராயன்' படத்தின் 'ஓ ராயா' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்தார்.
தனுஷ் நடித்த படங்களிலேயே ராயன்தான் அதிக வசூலித்த படமாகும். உலகளவில் இதுவரை ரூ. 155 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 2024 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் 25 மில்லியன் பார்வைகளை கடந்தது.
இந்நிலையில், 'ராயன்' படத்தின் 'ஓ.. ராயா' வீடியோ பாடல் இன்று வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது அந்த வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுடன் கனவ்யா துரைசாமி ஆகியோர் இந்த பாடலை இணைந்து பாடியுள்ளனர்.