விஜய் இல்லை...-'தி கோட்' படத்தில் நடிக்க வெங்கட் பிரபு முதலில் யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

'தி கோட்' படத்திற்கு முதலில் ’காந்தி’ என்று வெங்கட் பிரபு பெயர் வைத்ததாக கூறப்படுகிறது.

Update: 2024-09-02 12:17 GMT

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரைலர் மற்றும் 4 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனத்தை ஈர்த்தன. இப்படம் வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கியதையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், 'தி கோட்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு முதலில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷுக்காக எழுதியிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியும் அவரது மகனாக தனுசும் நடிக்க இருந்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு முதலில் காந்தி என்று வெங்கட் பிரபு பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தனது எண்ணத்தை மாற்றிய இயக்குனர், விஜய்யை இப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்ததாகவும் தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்