'நடிகை அல்ல...அதுதான் என் முதல் கனவு' - சூர்யா பட நடிகை
சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திஷா பதானி அறிமுகமானார்.
சென்னை,
பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
தற்போது, கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக நேற்று வெளியான 'கல்கி 2898 ஏ.டி.' படத்திலும் நடித்திருக்கிறார். 'வெல்கம் டு தி ஜங்கிள்' என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திஷா பதானி அளித்துள்ள பேட்டியில், "எனக்கு தென்னிந்திய படங்கள், வட இந்திய படங்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் அனைத்து மொழி படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது.
பிரபாசுடன் 'கல்கி' படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு அரங்கில் வீட்டில் இருந்து உணவை வரவழைத்து அவர் பரிமாறுவார். சூர்யாவுடன் 'கங்குவா' தமிழ் படத்திலும் நடிக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. விளம்பர படங்களிலும் நடிக்கிறேன்.
எனது தந்தை போலீஸ் அதிகாரி. தாயார் சுகாதார துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சகோதரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல். எனக்கு விமான படை பைலட் ஆக விருப்பம் இருந்தது. ஆனால் அந்த கனவை விட்டு விட்டு நடிகையாக மாறி இருக்கிறேன். நடனம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போன்றவை எனக்கு தெரியும்'' என்றார்.
.