அசோக் செல்வன் நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' படத்தின் டீசர் வெளியானது..!
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.