விக்ரம் ரசிகர்களுக்காக இன்று புதிய அப்டேட் - பொன்னியின் செல்வன் படக்குழு அறிவிப்பு
விக்ரமின் கதாபாத்திரம் தொடர்பான புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று பொன்னியின் செல்வன் படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம், ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், உடல் நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ளவில்லை. தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக விக்ரம் தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விக்ரமின் ரசிகர்களுக்காக அவரது கதாபாத்திரம் தொடர்பான புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று பொன்னியின் செல்வன் படக்குழு அறிவித்துள்ளது.