மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' படத்தின் புதிய அப்டேட்

'வாழை' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-17 16:39 GMT

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'.

இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 'வாழை' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'வாழை' படத்தின் முதல் பாடல் நாளை (ஜூலை 18) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்