நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன் 'படத்தின் புதிய அப்டேட்

இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது;

Update: 2022-08-03 17:03 GMT

சென்னை,

'டான்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.இந்த படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது ,மாவீரன் படத்தின் சண்டை காட்சிகளுடன் சிறப்பு வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டனர் .இந்த வீடியோ ரசிர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்