அருண்விஜய் நடித்துள்ள 'யானை' படத்தின் 'சண்டாளியே' பாடல் வெளியானது

'யானை' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது;

Update: 2022-06-17 20:34 GMT

சென்னை,

நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'யானை'. இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்

கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் யானை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி ஜூலை 1-ஆம் தேதிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 'யானை' படத்தில் இடம்பெற்றுள்ள 'சண்டாளியே' பாடல் வெளியாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்