விஜய் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

'ரோமியோ' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2024-01-30 22:05 IST

சென்னை,

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. . இந்நிலையில், 'ரோமியோ' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த திரைப்படம் வருகிற கோடையில் வெளியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்