நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'வாரிசு' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

நடிகர் விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Update: 2022-06-22 06:30 GMT

சென்னை,

நடிகர் விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து ரசிகர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 66-வது படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என சீனியர் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது.,"வாரிசு" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் 'வாரிசு' படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர் .இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது ,

Tags:    

மேலும் செய்திகள்