நயன்தாரா `ஐயா' படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் தமிழில் `காத்து வாக்குல ரெண்டு காதல்', `கனெக்ட்', `ஓ 2', தெலுங்கில் `காட் பாதர்', மலையாளத்தில் `கோல்டு' உள்ளிட்ட படங்கள் வந்தன. தற்போது `ஜவான்' படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். அட்லி இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார்.
`இறைவன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்து புதுமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். இது அவருக்கு 75-வது படம். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `ராஜா ராணி' படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்க்ஸ்லியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.