மீண்டும் அந்த இயக்குனருடனா? - நயன்தாராவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2024-07-16 07:16 GMT

சென்னை,

'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார்.

இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியதோடு நயன்தாராவை இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது. தற்போது, மலையாளத்தில் நிவின் பாலிவுடன் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், சர்ஜுன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நயன்தாரா நடித்திருந்த ஐரா படத்தையும் சர்ஜுன்தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிப்பது உறுதியானநிலையில், தற்போது 'ஐரா' பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்