மணிரத்னம் பட நடிகையுடன் காதலா? நாக சைதன்யா விளக்கம்
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாயின. நடிகை ஷோபிதா துலிபாலா குறித்து கேள்விக்கு நடிகர் நாக சைதன்யா அளித்துள்ள பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.;
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் நீடித்த இவர்களது மண வாழ்க்கை கடந்த ஆண்டு மனக்கசப்பினால் முறிந்து விவாகரத்து செய்து பிரிந்தனர். இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நடந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நாக சைதன்யா மீண்டும் ஷோபிதா துலிபாலா என்ற இளம் நடிகையின் காதல் வலையில் சிக்கி இருப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக கட்டி உள்ள பங்களா வீட்டுக்கு ஷோபிதா துலிபாலாவை நாக சைதன்யா அழைத்து சென்று அவருடன் பல மணிநேரம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஷோபிதா துலிபாலா நடித்து இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஷோபிதா துலிபாலாவை காதலிக்கிறீர்களா என்று நாகசைதன்யாவிடம் தற்போது கேள்வி எழுப்பியபோது, ''எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகிறது" என்று பதில் அளித்தார்.