பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.298 கோடி வசூல்!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.298.5 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-29 12:36 GMT

சென்னை,

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது. வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு பொருட் செலவு செய்து 'கல்கி 2898 ஏ.டி' படத்தினை தயாரித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம்  ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் - புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. கமல்ஹாசனின் தோற்றமும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இப்படம், முதல்நாளில் உலகளவில் ரூ.191 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ.298.5 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படம் இந்த வார முடிவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்