'வாத்தி' படத்தின் 'நாடோடி மன்னன்' பாடல் வெளியீடு

'வாத்தி' படத்தின் நாடோடி மன்னன் பாடல் இன்று வெளியாகியுள்ளது

Update: 2023-01-17 11:42 GMT

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'வாத்தி' படத்தின் நாடோடி மன்னன் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர் .

Tags:    

மேலும் செய்திகள்