இசைக்கு வயது கிடையாது: இசையமைப்பாளர் வித்யாசாகர்

கடந்த 34 வருடங்களாக தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-18 16:04 GMT

மீரா மஹதி எழுதி இயக்கியுள்ள படம், 'டபுள் டக்கர்'. இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்ட 2 அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனீஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், 'டெடி' கோகுல் நடித்துள்ளனர். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். 

இப்படத்தின் ஆடியோ விழாவில் வித்யாசாகர் பேசுகையில், ' இயக்குநர் மீரா மஹதி சொன்ன கதை பிடித்ததால் இசை அமைக்க சம்மதித்தேன். கடந்த 34 வருடங்களாக தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இசைக்கு வயது என்பதே கிடையாது, நல்லிசைக்கும், மெல்லிசைக்கும் தமிழ் மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். 'டபுள் டக்கர்' படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்களையும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்