'டாக்டர்' பட்டம் பெற்ற இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் ஆதி ‘டாக்டர்’ பட்டம் பெற்றார்.;

Update: 2023-08-24 13:57 GMT

கோவை,

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி 'டாக்டர்' பட்டம் பெற்றுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம், இசையமைப்பாளர் ஆதி 'டாக்டர்' பட்டத்திற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஆதி, கடந்த 5 ஆண்டுகளாக 'இசைத்துறை தொழில்முனைவு' குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்ததாகவும், வேலைக்கு நடுவில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது கடினமானதாக இருந்தாலும் தற்போது 'டாக்டர்' பட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்