"ஷாருக்கான் தனது மகளுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும்" - பதான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

தீபிகா படுகோனே மற்றும் ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' திரைப்படத்திற்கு மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-19 10:23 GMT

போபால்

ஷாருக்கான் -தீபிகா படுகோன் நடித்த பதான் படத்தை மத்திய பிரதேசத்தில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இப்போது மாநிலத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் விமரசனம் செய்து வருகின்றனர்.

பதான் தொடரபான விவகாரம் மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இது பதான் பற்றியது அல்ல, பரிதான் (ஆடைகள்)" என்று சுரேஷ் பச்சூரி கூறினார். இந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது வேறு எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஆடைகளை அணிந்து பொது இடங்களில் தன்னைக் காட்டிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்திய கலாச்சாரத்தில் உள்ள அனைத்து மதங்களும் ஒருமனதாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

தீபிகா படுகோனே மற்றும் ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' திரைப்படத்திற்கு மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

"ஷாருக்கான் தனது மகளுடன் இந்தப் படத்தைப் பார்த்து, அதை தனது மகளுடன் பார்க்கிறேன் என்று உலகுக்குச் சொல்ல வேண்டும். நபிகள் நாயகத்தைப் பற்றி இதே போன்ற படத்தைத் தயாரித்து இயக்க நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்," என்று கூறி உள்ளார்.

மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா "பாடலில் உள்ள ஆடைகள் ஆட்சேபனைக்குரியவை. பாடல் ஒரு மோசமான் மனநிலையை பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது

"பாடலின் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை சரிசெய்யுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். முன்னதாக, தீபிகா படுகோனே ஜேஎன்யூவில் 'சின்ன சின்ன கும்பலுக்கு ஆதரவாக நின்றார். அவரது மனநிலை அம்பலமானது.

பாடலின் தலைப்பு 'பேஷாரம் ரங்' என்று நான் நம்புகிறேன். மேலும், காவி மற்றும் பச்சை நிறங்கள் ஆடைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஆட்சேபனைக்குரியது. மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், தவறினால் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட வேண்டுமா என்பது குறித்து நாங்கள் ஆலோசிப்போம் என கூறினார்.

பதான் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மத்திய பிரதேசத்தை சேர்ந்த உலமாக்கள் பதான் படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் இஸ்லாமிய உணர்வுகளை பாதிக்கும் பதான் படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளனர்.

பதான் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்தவேண்டும் என அயோத்தியின் ஹனுமன் காரி அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே 'பதான்' இந்தி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார்.ஹாட் பிகினி தோற்றத்தில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாடலில் தீபிகா படுகோனே காவி உடை அணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. ஷாருக்கான் கொடும்பாவியை எரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்