என்னை அழவைத்த படம் - காஜல் அகர்வால்
எவ்வளவு கட்டுப்படுத்தியும் அழுகையை நிறுத்த முடியவில்லை என்று காஜல் அகர்வால் கூறினார்.;
சென்னை,
காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார். கமல்ஹாசனுடன் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் திரைக்கு வர தயாராகிறது.
இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், "ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது போரடித்ததால் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து தயாரான 'மேஜர்' படத்தை பார்த்தேன்.
அப்போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். எவ்வளவு கட்டுப்படுத்தியும் அழுகையை நிறுத்த முடியவில்லை. நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தேன். நிஜத்தில் அந்த தாக்குதலுக்கும், எனது வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது. தாக்குதல் நடந்த ஓட்டலின் அருகில்தான் எங்கள் வீடு இருந்தது'' என்றார்.
மேலும் காஜல் அகர்வால் கூறும்போது, ''நான் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு மணி நேரத்தில் சொல்லி முடித்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு ஒரு கதையை கேட்டேன். ஆனால் கதையை ஆரம்பித்தபிறகு மூன்று மணிநேரம் கடந்து விட்டது.
எனக்கு தெரியாமல் அந்த கதையோடு ஒன்றி விட்டேன். உடனே நடிக்க சம்மதம் சொன்னேன். அதுதான் 'சத்யபாமா' தெலுங்கு படம். எனது கேரியரில் மிகவும் விரும்பி நடித்த படம் இதுவாகும்'' என்றார்.