விஜய் பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெயரில் பண மோசடி

லோகேஷ் கனகராஜ் பெயரில் இளம் நடிகர்-நடிகைகளிடம் பணம் மோசடி நடப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி குற்றம் சாட்டி உள்ளார்

Update: 2023-10-07 01:41 GMT

தமிழில் 'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த 'கைதி', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்களை டைரக்டு செய்தார்.

தற்போது இவரது இயக்கத்தில் உருவான விஜய்யின் 'லியோ' படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பெயரில் இளம் நடிகர்-நடிகைகளிடம் பணம் மோசடி நடப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி குற்றம் சாட்டி உள்ளார்

இதுகுறித்து அவர் கூறும்போது, "சினிமா துறையில் இளம் நடிகர்-நடிகைகளை குறிவைத்து புதிய மோசடி நடக்கிறது. டைரக்டர் லோகேஷ் கனகராஜின் மானேஜர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் இளம் நடிகர்-நடிகைகளுக்கு குறுந்தகவல் அனுப்புகிறார். போனிலும் பேசுகிறார்.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்துக்கு உங்களை பரிசீலிக்கிறோம் என்றும், பணம் அனுப்பினால் நடிப்பு தேர்வுக்கு வரும்போது அணிய தேவையான ஆடைகளை வாடகைக்கு தருகிறோம் என்றும் பேசி பணம் வசூல் செய்கிறார்.

சினிமா துறைக்கு வரவேண்டும் என்ற கனவில் இருக்கும் இளம் நடிகர்-நடிகைகளை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்