விஜய்யின் 68-வது படத்தில் மோகன்

விஜய்யின் 68-வது படத்தில் தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த மைக் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Update: 2023-10-03 06:00 GMT

விஜய்யின் லியோ படம் திரைக்கு வரும் நிலையில் அடுத்து தனது 68-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை வெங்கட்பிரபு டைரக்டு செய்கிறார். இதில் விஜய் தந்தை, மகனாக இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

விஜய்யுடன் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகள் விவரம் வெளியாகி உள்ளது. இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும் நடிக்கிறார்கள். மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் திரைக்கு வந்த விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து இருந்தார்.

பிரசாந்த், லைலா ஆகியோரும் நடிக்கிறார்கள். அத்துடன் தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த மைக் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க மோகனுக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல். அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? அல்லது குணசித்திர வேடமா? என்பது தெரியவில்லை.

இன்னும் சில தினங்களில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. வெளிநாடுகளிலும் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்