'மெட்ரோ' பட நடிகர் சிரிஷ் திருமணம்

‘மெட்ரோ’ பட நடிகர் சிரிஷிற்கு நேற்று ஹஸ்னா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2024-07-13 12:09 GMT

சென்னை,

'மெட்ரோ' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜா ரங்குஸ்கி, பிஸ்தா போன்ற படங்கள் மூலம் மக்களை கவர்ந்த இவர் கிடைக்கும் நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தாலும் சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டியவர்.


இந்த நிலையில் நடிகர் சிரிஷிற்கு நேற்று (ஜுலை 12) திருமணம் நடந்துள்ளது. ஹஸ்னா என்பவருடன் நடிகர் சிரிஷிற்கு திருமணம் நடந்துள்ளது.உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசியுடன் இந்த திருமணம் நடந்த நிலையில் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்