முதல் வருமானம் ரூ.500...தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்
எந்த ஒரு திரைப்பின்புலமும் இல்லாமல் சினிமாத்துறைக்கு வந்த பலர் தற்போது நட்சத்திரமாகி உள்ளனர்.;
சென்னை,
எந்த ஒரு திரைப்பின்புலமும் இல்லாமல் சினிமாத்துறைக்கு வந்த பலர் தற்போது நட்சத்திரமாகி உள்ளனர். அப்படிவந்த ஒருவர்தான் நடிகை சமந்தா. இவருக்கு தற்போது உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
1987-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சமந்தா. இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமா துறையில் ஆர்வம் அதிகம். தனது கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் மாடலிங் பயணத்தைத் தொடங்கினார். அப்போதுதான் சமந்தாவிடம் உள்ள நடிப்பு திறமையை திரைப்பட தயாரிப்பாளர் ரவிவர்மன் கண்டுபிடித்து இருக்கிறார்.
2007-ல் ரவிவர்மனின் இயக்கத்தில் 'மாஸ்கோவின் காவேரி' படம் மூலம் சமந்தா சினிமாவுக்குள் அறிமுகமாகவிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 2010-ம் ஆண்டில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'ஏ மாய சேசவே' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் சமந்தா அறிமுகமானார்.
சமீபத்தில், ஒரு பேட்டியில் தனது முதல் சம்பளம் குறித்து சமந்தா கூறியிருந்தார். அவர் கூறியதாவது, என்னுடைய முதல் வருமானம் ரூ. 500. இதனை நான் ஒரு ஓட்டலில் 8 மணி நேரம் வேலை பார்த்து சம்பாதித்தேன். அப்போது நான் 10வதோ அல்லது 11வதோ படித்தேன். இவ்வாறு கூறினார்.
நடிகை சமந்தா, ரூ. 500 சம்பளத்தில் தொடங்கி தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளுல் ஒருவராக உயர்ந்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு தற்போது ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.