மார்ட்டின் டிரெய்லர் வெளியீடு

கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவான மார்ட்டின் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.;

Update: 2024-08-05 16:10 GMT

மும்பை,

கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்ட்டின் படத்திற்கான திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார். இதில் துருவா சர்ஜா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.பெரிய பொருள்செலவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளால் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆக்சன் திரைப்படமாக உருவான இது வருகிற அக்டோபர் 11-ம் தேதி இந்திய மொழிகள் மட்டுமல்லாது கொரியன், ஜப்பான், ஸ்பானிஷ் மற்றும் ரஷிய மொழிகளிலும் நேரடியாக வெளியாகிறது

கடந்தாண்டு வெளியான மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்