அனிமல் படம் - அது உண்மையாக இருந்திருந்தால் மந்தனா பாத்திரத்தில் நான்... - பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை மானுஷி சில்லர் அனிமல் படத்தில் நடிப்பதாக வதந்திகள் பரவின.;

Update:2024-04-21 11:57 IST
அனிமல் படம் - அது உண்மையாக இருந்திருந்தால் மந்தனா பாத்திரத்தில் நான்... - பாலிவுட் நடிகை

சென்னை,

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அனிமல். இப்படத்தை 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். இந்த படத்தில் அனில் கபூர் மற்றும் திரிப்தி டிம்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி உலகளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தது.

முன்னதாக இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மானுஷி சில்லர் நடிப்பதாக வதந்திகள் பரவின. இந்நிலையில், இப்படம் குறித்து அவர் பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மானுஷி சில்லர் கலந்துகொண்டார். அப்போது அவர் வதந்திகள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது,

எனக்கு சந்தீப் ரெட்டி வங்காவை பிடிக்கும். அந்த படத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனா மற்றும் திரிப்தி டிம்ரியின் கதாபாத்திரங்கள் மிகவும் சுவாரஷ்யமாக இருந்தன. ஆனால், எனக்கு ராஷ்மிகாவின் பாத்திரம் பிடித்திருந்தது. வதந்திகள் உண்மையாக இருந்திருந்தால் ராஷ்மிகாவின் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். இவ்வாறு கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்