'தளபதி 69' படத்தில் இணையும் மஞ்சு வாரியர்?
நடிகை மஞ்சு வாரியர் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.
'தளபதி 69' படத்தை அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்தநிலையில் தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், துணிவு படத்தில் எச். வினோத்துடன் பணியாற்றி வந்தபோது, 'நீங்கள் நடிக்க மற்றொரு படம் தருகிறேன்' என எச். வினோத் தன்னிடம் கூறியதாக மஞ்சு வாரியர் பேசியுள்ளார். இதற்கிடையில் நடிகை மஞ்சு வாரியர் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.