'என்னைப்போல பல பெண்கள் அதை பெற்றிருப்பதில்லை'- நடிகை மம்தா

எனக்கு என் தனிப்பட்ட வாழ்க்கைதான் முக்கியம் என்று நடிகை மம்தா மோகன்தாஸ் கூறினார்.;

Update: 2024-06-22 12:33 GMT

சென்னை,

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் மம்தா மோகன்தாஸ். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி, பாடல்களும் பாடியுள்ளார். தமிழில் 2006-ல் வெளியான சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு வெளியான 'எனிமி' படத்தில் நடித்து இருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியாகி வெற்றிநடை போட்டுவருகிறது.

இந்நிலையில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட இடைவெளி குறித்து பேசினார். இது குறித்து அவர் பேசுகையில்,

'பெரும்பாலான பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காகவோ அல்லது குழந்தை பெற்றெடுப்பதற்காகவோ சினிமாவிற்கு சிறிது இடைவெளி விடுகிறார்கள். நானும் அப்படித்தான். எனக்கு என் தனிப்பட்ட வாழ்க்கைதான் முக்கியம். இரண்டு வருடம் நடிக்கிறேன், பின்பு ஒரு வருடம் செல்கிறேன், பின்பு வருகிறேன். இதை நான் சினிமாவிற்கு வந்த தொடக்கத்திலிருந்தே செய்து வருகிறேன்.

இது என் சினிமா வாழ்க்கையில் 19வது வருடம். அதில், சில படங்களை தவறவிட்டிருந்தாலும், தனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் வாய்ப்புகளுக்கு நன்றியுடன் இருக்கிறேன். என்னைப்போல பல பெண்கள் நிலையான வாழ்க்கையைப் பெற்றிருக்கவில்லை. ,' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்