மம்முட்டி பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மம்முட்டி நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.;

Update: 2024-09-07 11:23 GMT

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள திரைபடம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் அண்மையில் வெளியான டர்போ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மம்முட்டியை வைத்து பிரபல இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனன் படம் இயக்கப் போவதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்க பட்ட நிலையில் கொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சத்தமின்றி நடைபெற்றது.

கவுதம் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படமான இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்க உள்ளார் . இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று இந்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது . அதன்படி ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகும் இந்த படத்திற்கு 'Dominic and the Ladies' purse' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

இரவு உடையுடன், பெண்கள் உபயோகப்படுத்தும் பர்சை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார் மம்முட்டி. அவரது அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்க, பூனை ஒன்றும் அவரை பின் தொடர்கிறது. பெண் ஒருவரின் ஹேண்ட் பேக் திறந்து கிடக்கிறது. பின்னணியில் சில நபர்களின் புகைப்படங்கள் மார்க் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி ஹாலிவுட் பட போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஜேம்ஸ் பாண்ட் '007' பட போஸ்டர் உள்ளது. அதை வைத்து பார்க்கும்போது மம்முட்டி துப்பறிபவராக இருப்பார் என தெரிகிறது. கிரைம் த்ரில்லராக இருக்கும் என்பதை போஸ்டர் உறுதி செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்