டைரக்டரை உருவக்கேலி செய்து மன்னிப்பு கேட்ட மம்முட்டி

‘2018’ என்ற பெயரில் புதிய படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மம்முட்டி பங்கேற்று ‘‘டைரக்டர் ஜூட் ஆண்டனி உருவக்கேலி செய்து பேசினார். இதற்கு ஒரு மூத்த நடிகர், டைரக்டரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பலரும் கண்டித்தனர். இதையடுத்து மம்முட்டி மன்னிப்பு கேட்டுள்ளார்.

Update: 2022-12-16 01:11 GMT

பிரபல மலையாள டைரக்டர் ஜூட் ஆண்டனி. இவர் நிவின் பாலி, நஸ்ரியா நடித்த 'ஓம் சாந்தி ஓசானா' மற்றும் 'ஒரு முத்தாஸி கதா', 'சாராஸ்' உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார்.

தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார். இதில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மம்முட்டி பங்கேற்று பேசும்போது, ''டைரக்டர் ஜூட் ஆண்டனி தலையில் முடி இல்லா விட்டாலும் அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டிரெய்லர் சிறப்பாக உள்ளது" என்றார். இதற்கு வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

ஒரு மூத்த நடிகர், டைரக்டரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பலரும் கண்டித்தனர். இதையடுத்து மம்முட்டி மன்னிப்பு கேட்டுள்ளார். மம்முட்டி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''டைரக்டர் ஜூட் ஆண்டனியை பாராட்டும்போது பேசிய வார்த்தைகளால் சிலர் புண்பட்டு இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் நன்றி" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்