ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற மாதவன்..!

நடிகர் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.;

Update: 2022-07-31 08:36 GMT

சென்னை,

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட்ரி - நம்பி விளைவு. மாதவன் இயக்கும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை பெற்றது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியான இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மேலும், இந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்