இந்தியில் 'ரீமேக்' ஆகிறது 'லவ் டுடே'

லவ் டுடே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

Update: 2023-02-22 02:42 GMT

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி கதாநாயகனாக நடித்த 'லவ் டுடே' படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் நாயகியாக இவானா மற்றும் சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இந்த நிலையில் லவ் டுடே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். "நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. லவ் டுடே வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இன்னும் பல பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி'' என்று அவர் கூறியுள்ளார். 'லவ் டுடே' இந்தி ரீமேக்கில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் இஷான் கட்டர் அல்லது விக்கி கவுஷல் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. நாயகியாக நடிக்க சாரா அலிகான் பெயர் அடிபடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்