படப்பிடிப்பில் காதல்... தெலுங்கு நடிகரை மணக்கும் லாவண்யா

Update:2023-05-18 17:31 IST

தமிழில் சசிகுமார் ஜோடியாக 'பிரம்மன்' படத்தில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. 'மாயவன்' படத்திலும் நடித்து இருந்தார். தற்போது 'தணல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் வாவண்யா திரிபாதிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லாவண்யா திரிபாதியும், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வருண் தேஜும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய 2 தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

ஆனாலும் காதல் குறித்து எந்த விளக்கமும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் (ஜூன்) நடக்க இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளில் இருவீட்டு குடும்பத்தினரும் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் பரவி உள்ளது. திருமணத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த திட்டமிட்டு உள்ளனர். நடிகர் வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்