காதலுக்கு வயது இல்லை -மாளவிகா மோகனன்

காதலுக்கு வயது இல்லை என்று நடிகை மாளவிகா மோகனன் வலைத்தளத்தில் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-31 02:23 GMT

ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், தனுசுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். தங்கலான் படத்திலும் விக்ரமுடன் நடிக்கிறார். மாளவிகா மோகனன் முதல் முதலாக பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு பியாண்ட் தி கிளவுட்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் மாளவிகா மோகனனை அவரை விட வயது குறைந்த இளைஞர் காதலிப்பது போன்ற கதையம்சம் கொண்டது.

இந்த நிலையில் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் மாளவிகா மோகனன் கலந்துரையாடியபோது ஒரு ரசிகர் வயதில் மூத்த பெண்ணுக்கும் வயது குறைவாக உள்ள ஆணுக்கும் இடையேயான காதல் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மாளவிகா மோகனன் கூறும்போது, "காதல் என்றால் காதல் தான். காதல் அந்தஸ்து பார்க்காது. காதலுக்கு வயது இல்லை. அதற்கு சமூக எல்லைகளும் கிடையாது'' என்றார்.

இந்த பதிவு வைரலாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்