நீடூழி வாழ்க தலைவா! - ரஜினிகாந்துக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு ஹர்பஜன் சிங் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-12 05:50 GMT

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "செப்பு மிங்கிளாகிவரும் தங்கம் அல்ல அவர்... எப்பவுமே சிங்கிளாகவரும் சிங்கம்!!

சூப்பர் மனிதர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை. நீடூழி வாழ்க தலைவா!" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்