பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர். விட்டல் மாரடைப்பால் காலமானார்

பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர். விட்டல் (வயது 91) மாரடைப்பால் காலமானார்.;

Update: 2023-07-27 01:45 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர். விட்டல். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் படங்களில் பணியாற்றி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, கழுகு உள்ளிட்ட 35 திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். படிக்காதவன், சர்வர் சுந்தரம், விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கும் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இதுதவிர, அவர் 5 படங்களை இயக்கியுள்ளார். 3 படங்களை தயாரித்தும் உள்ளார். இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். இவர்களது, கூட்டணியில் 70 திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

இது மட்டுமின்றி, தமிழ் திரையுலகில் ஒட்டுமொத்தமாக 300 படங்களுக்கும் கூடுதலாக, படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்