நடிகராக அறிமுகமாகிறார் காமெடி நடிகர் செந்திலின் மகன்..!

பிரபல காமெடி நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு நடிகராக அறிமுகமாகிறார்.;

Update: 2022-06-26 14:52 GMT

சென்னை,

நடிகர் பாபி சிம்ஹா, அறிமுக இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தடை உடை' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவரது மகன் மணிகண்ட பிரபு இந்த திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த நிலையில் நடிகராக அறிமுகமாக உள்ள மணிகண்ட பிரபுவை வரவேற்று பாபி சிம்ஹா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ரேஷ்மி சிம்ஹா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில், மிஷா நரங், பிரபு, ரோகினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் செந்தில் மற்றும் மணிகண்ட பிரபு இருவரும் அப்பா மகனாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்