ஸ்கூல் முடித்து காலேஜ் போயிட்டேன்...குட்டி நயன் அனிகாவின் காலேஜ் கிளிக்ஸ்

மலையாளத்தில் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் ஓ மை டார்லிங் ஆகும்.;

Update:2024-04-22 10:07 IST

சென்னை,

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அப்படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார் அனிகா. அஜித் - அனிகா இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனதால் அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அனிகாவின் அம்மா கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்னர் அனிகாவை குட்டி நயன் என அழைக்க தொடங்கினர்.

இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன், மாமனிதன் போன்ற படங்களிலும் நடித்த அனிகா, 18 வயசு ஆனதும் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். அவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் புட்ட பொம்மா. தெலுங்கு படமான இது மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன கப்பா படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் நடித்து முடித்த கையோடு மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

மலையாளத்தில் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் இது. இப்படத்தில் லிப்லாக் முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து அதிர்ச்சி கொடுத்தார் அனிகா. அவர் இவ்வளவு கவர்ச்சியாக நடித்திருந்தாலும் இப்படம் தோல்வியை தழுவியது. தற்போது அனிகா நடிப்பில் பிடி சார் திரைப்படம் உருவாகி வருகிறது. ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அனிகா. அந்த வகையில் தற்போது தான் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்யும் விதமாக கல்லூரியிலேயே போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் படிக்க போனீங்களா இல்ல போட்டோ ஷூட் நடத்த போனீங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்