'குபேரா' படத்தில் நாகார்ஜுனா பர்ஸ்ட் லுக் - வீடியோ வெளியீடு

'குபேரா' படத்தில் நாகார்ஜுனாவின் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.;

Update: 2024-05-02 15:43 GMT

'குபேரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம் பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குபேரா படத்தில் நாகார்ஜுனாவின் பர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கனமழை பெய்யும் இரவு நேரத்தில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லாரி அருகில் நாகார்ஜுனா குடை பிடித்து நிற்கும் காட்சிகள் பர்ஸ்ட் லுக் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்