பிரபாஸ், கிருத்தி சனோன் திருமண நிச்சயதார்த்தம்...? உண்மை என்ன...!

தொடர் தோல்விகளை சந்தித்த பிறகும் பிரபாஸ் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Update: 2023-02-09 07:20 GMT

புதுடெல்லி

தெலுங்கு நடிகர் பிரபாஸ் 'பாகுபலி' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். அவரது படங்களை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் 'பான் இந்தியா' படமாக வெளியிட்டு வசூல் பார்த்து வருகிறார்கள். பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் 'ராதே ஷியாம்' படம் வெளியானது.கடந்த ஆண்டு வெளியான ராதே ஷியாம் படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது.

இதுபோன்ற தொடர் தோல்விகளை சந்தித்த பிறகும் பிரபாஸ் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

தற்போது 'ஆதிபுருஷ்', 'சலார்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அனுஷ்காவையும், பிரபாசையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். தற்போது பிரபாசுக்கு 43 வயது ஆகிறது.

இந்த நிலையில் பிரபாசுக்கும், நடிகை கிருத்தி சனோனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. இருவருக்கும் மாலத்தீவில் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் 'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிச்சயதார்த்தம் நடப்பதை இருவரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. கிருத்தி சனோன் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மாலித்தீவுகளில் ஆடம்பர ரிசார்ட்டில் வைத்து காதலர் தினத்தன்று இருதரப்பு திருமண நிச்சயதார்த்தமாக நடைபெறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இருவரும் வெறும் நண்பர்கள் என்றும், நிச்சயதார்த்த செய்திகளை நிராகரிப்பதாகவும் பிரபாசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நிச்சயதார்த்தம் குறித்த வதந்திகளை பிரபாஸ் தரப்பினர் நிராகரித்துள்ளனர்.

பிரபாசும், கிருத்தியும் வெறும் நண்பர்கள்தான். இவர்களது நிச்சயதார்த்தம் குறித்த செய்தியில் உண்மையில்லை என கூறி உள்ளனர்.

திருமண வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கிருத்தி தனது இன்ஸ்டாவில் இடுகையில், ஹாலிவுட் ஐகான் ஓப்ரா வின்ஃபிரேயின் "லெட்டிங் கோ" வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஓப்ரா அதில் கூறுகிறார், " மக்கள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஏற்றுக்கொள்ளாதீர்கள். இதைச் செய்யாததன் மூலம், உங்கள் நேரத்தை வீணடிக்கும் சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள்.

அது உங்கள் ஆற்றலையும் செலவழிக்கிறது, வீடியோவைப் பகிரும் போது ஒரு சல்யூட் ஈமோஜியையும் சேர்த்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்