குடும்பத்தினருடன் பூர்வீக வீட்டுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள தனது மூதாதையரின் பூர்வீக வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.;

Update: 2022-11-23 02:31 GMT

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உதயநிதியுடன் மாமன்னன், ஜெயம் ரவி ஜோடியாக சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரே நாளில் பிறந்த தனது பெற்றோர்கள் பிறந்த நாள் விழா எடுத்து கொண்டாடினார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு செல்வது. உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு போவது போன்ற பழக்கங்களை கடைபிடித்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள தனது மூதாதையரின் பூர்வீக வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். பழமை வாய்ந்த அந்த வீட்டின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று தரையில் உட்கார்ந்து மகிழ்ந்தார்.

அங்குள்ள உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் மேக்கப் எதுவும் போட்டுக் கொள்ளாமல் எளிமையாகவே இருந்தார். அங்கிருந்த 8-ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கும் சென்று சுற்றி பார்த்து சாமியை வழிபட்டார். இந்த புகைப்படங்களை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவை வைரலாகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்