கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படம் வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ். இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது தமிழில் விஜய் நடித்து வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முத்த காட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, 69வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.