சீதை வேடத்தில் நடிக்க அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய கீர்த்தி சனோன்

Update: 2023-05-28 02:42 GMT

ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சீதை வேடத்தில் நடித்த அனுபவங்களை கீர்த்தி சனோன் பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "அசைவம் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் சீதை கதாபாத்திரத்தில் சாத்வீகமாக இருப்பதற்காக அசைவம் உண்பதை படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களிலும் நிறுத்திவிட்டேன்.

மாடர்ன் உடைகளையே விரும்பும் நான் படப்பிடிப்பு முடியும் வரை புடவையோடுதான் காட்சியளித்தேன்.

தீபிகா படுகோனே, அலியா பட் போன்றோரின் போட்டிக்கு மத்தியில் இந்த கதாபாத்திரம் என் கைக்கு வந்தது.

இது போன்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொரு நடிகைக்கும் வாழ்நாளில் எப்போதாவதுதான் அரிதாக கிடைக்கும். சீதை தெய்வீகமாக எப்படி இருப்பார் என்பதை புரிந்து அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நிறைய புத்தகங்களை படித்தேன்.

சீதை கதாபாத்திரத்தில் நடித்த முந்தைய தலைமுறை நடிகைகளின் படங்களை பார்த்தேன். சீதை கதாபாத்திரம் தெய்வீகமாக காட்சி அளிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து இருக்கிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்